Wednesday, December 14, 2011

இதுதான் சாப்ட்வேர் பிசினஸ்..! (நான் ரசித்த கட்டுரை)

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"       - 
 நியாயமான ஒரு கேள்வி

-
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த
அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales
Consultants. ...".
 
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.


அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA
படிக்கணும்?" –


அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

அப்பா : “சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல
முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு  குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”

அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்?
ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"


"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு
நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத
பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு"
புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?"- அப்பா ஆர்வமானார்.
-
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise
பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-
அப்பா : "CR-னா?"
-
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50
நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
-
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
 அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?"
-
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."

அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
-
அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி
பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-
"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க
இருப்பாங்க."
-
அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா
முடிஞ்சிடுமே?"


"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க
மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும்
போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தல
திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?   அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.
அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி
இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக்
குற்ற உணர்ச்சி
எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

அப்பா: "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
-
அப்பா : "எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல
வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன
குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு
போகட்டும்னு விட்டுருவான்".

அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு
வந்துடுவீங்க அப்படித்தான?"


"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி
இருக்குறமாதிரியும்,
அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-
"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட
பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது
மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.


அப்பா : "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."


Tuesday, November 8, 2011

நான் படித்த சிறந்த விமர்சனம்...படம் - வேலாயுதம்

வேலாயுதம் விமர்சனம் :

(இத எதுக்கு நமக்கு முன்னாடி வச்சிருக்காங்க...நம்மள அறிவாளின்னு நினைக்கிறாங்களோ ?)
வேலாயுதம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்த நொடியில் இருந்தே துவங்கிவிட்டது. அதிலும் விஜய் அணிந்திருந்த சூப்பர் ஹீரோ உடையை எதோ ஒரு வெள்ளைக்காரன் திருடி தன் வீடியோகேமில் பயன்படுத்தி இருப்பதை அறிந்து வியந்தேன். விஜய்க்குதான் எங்கெல்லாம் ரசிகர்கள்!!


நண்பர் ஒருவர் "வேலாயுதம் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்தாளமிக்க விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்" என்று முகநூலில் செய்தி அனுப்பியிருந்தார். எனக்குத் தெரிந்து என் பரம்பரை விரோதிகள் கூட இவ்வளவு அசிங்கமாக என்னிடம் ஒரு கேள்வியை கேட்டதில்லை! அதன் பொருட்டே இந்த விமர்சனம்.


எத்தனைப் பேருக்கு பழையதை மறந்து மீண்டும் புதிதாய் வாழும் வாய்ப்பு அமையும்? விஜய்க்கு அந்த வாய்ப்பு, அந்த வரம் ஒவ்வொரு படத்துக்கும் அமைந்துவிடுகிறது. தன் பழைய பட கதைகளை(??) மறந்துவிட்டு அடுத்த படத்தில் புதிதாக முதலில் இருந்து தொடங்குவார்.


வேலாயுதம் படம் ஓடத்துவங்கி சிறிது நேரத்தில் தியேட்டரில் ஒரே ரகளை, சத்தம். ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். "என்னடா டேய்!! வேலாயுதம்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு திருப்பாச்சி படம் போட்டு ஏமாத்துறீங்களா?" என்று. பின் தியேட்டர் உரிமையாளர் சரண்யா மோகனையும், திருப்பாச்சியில் தங்கையாய் வந்த மல்லிகாவையும் ஒப்பிட்டு, "அந்த பொண்ணு சிவப்பு, இந்த பொண்ணு கருப்புய்யா! பாருங்க" என்று விளக்கி சமாதானம் செய்தார். இதில் தங்கச்சியை அழைத்துக்கொண்டு சென்னை வந்து அங்கிருக்கும் தீவிரவாதிகளை அழிக்கிறார். "ஏய் இதானப்பா திருப்பாச்சில பண்ணாரு"னு சொல்லாதீங்க. அது ரவுடி, இது தீவிரவாதி!


"அவரு யாரு தெரியுமா?" என போன படத்தில் ரசிகர்களைப் பார்த்து கேட்ட அதே கிழவரே இந்த படத்திலும் கேட்டது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இந்த வசனத்தை வேறு கிழவரை வைத்து எடுத்திருந்தால் சூப்பராக இருக்கும் என 'variety' எதிர்பார்க்கும் விஜய் ரசிகர்கள் முணுமுணுத்தார்கள்.


பின் "சொன்னா புரியாது செத்தாதான் புரியும்" என்ற அறிமுகப் பாடலை பாடி ஆடினார் விஜய். பாடல் மிக வித்தியாசமாக சமூக அக்கறையுடன், ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும்படி இருந்தது. போன பட அறிமுகபாடலில் போட்டிருந்த சட்டையை மாற்றி இதில் வேறு சட்டை அணிந்து ஆடியது ஒவ்வொரு படத்திற்கும் விஜய் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதைக் காட்டியது. இளைஞர்களுக்கு அவர் ஒரு inspiration!


ஹன்சிகா மோத்வானி விஜய் மேல் காதல்வெறிகொண்டு அலைகிறார். பெண் இனத்தையே பெருமைப்படுத்தும் இது போன்ற கதாப்பாத்திரங்கள் விஜய் படத்தில ஏராளமாக பார்க்கலாம். பின் ஜெனிலியா வருகிறார். அவருக்கும் விஜய் மீது காதல் வெறி! பெயரைக்கேட்டால் "வேலூஊஊஊஊஊஉ வேலாஆஆஆயுதம்ம்ம்ம்ம்" என அமாவசை இரவில் ஊளையிடுவதைப் போல ஸ்டைலாக பதில் சொல்லும் ஆணின் மேல் யாருக்குதான் காதல் வராது?


என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சியைப் பற்றி சொல்கிறேன். வில்லன் "காட்டுடா காட்டுடா" என சொன்னதும், விஜய் "நான் சும்மாவே காட்டுவேன். நீ காட்டு காட்டுனு சொல்ற" என பதில் சொன்னதும் அதிர்ச்சியின் உறைந்துபோனேன். எதையோ காட்டப் போகிறார் என பயந்து அனைவரும் கண்களை மூடிக்கொண்டவுடன் துவங்கியது வில்லன் பறந்து போய் விழுந்த அந்த புதுமையான ஆக்சன் காட்சி!


உலக திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமையை செய்துள்ளார் ரீமேக் ராஜா. வேற்றுமொழி திரைப்படத்தை ரீமேக் செய்யும் கேவலமான உலகத்தில், வேற்றுமொழி வீடியோகேமை ரீமேக் செய்திருக்கிறார். ரசாயன ஆலையில் ரயிலை மோதச் செய்ய வில்லன்கள் போடும் திட்டம், அதற்காக வில்லன் வைத்திருக்கும் மேப், கிராஃபிக் காட்சிகள் என அனைத்துன் 'ஹிட்டன் டேஞ்சரஸ்' என்ற கணிணி விளையாட்டில் வருபவை. தமிழ்ப்படத்தை அடுத்த கட்டத்துக்கு நகட்டிய ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.


பின் ட்ரெயினை விஜய் sudden break போட்டு நிறுத்தி ஆலையைக் காப்பாற்றுகிறார். நல்லவேளை அந்த ட்ரெயினில் 'டிஸ்க் ப்ரேக்' இருந்தது! அருமையான படம் அதோடு முடிந்துவிட்டதே என ரசிகர்கள் வருந்திய நேரத்தில் 'ரத்தத்தின் ரத்தமே' என்ற பாடல் வருகிறது. பின் சரண்யா மோகன் சாகிறார். ஏன் சாகிறார் என கேட்காதீர்கள்! அவர் உயிர் போய்விட்டது அதனால் சாகிறார்!


அதன் பின் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வில்லனை கொல்கிறார் வேலாயுதம். முதல் பாதியில் ஹன்சிகாவின் வயிற்றையே காண்பித்துக்கொண்டிருந்தவர்கள் இறுதி சண்டைக்காட்சியில் விஜயின் வயிற்றையே காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எதற்கு என தெரியவில்லை! ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் சம உரிமை கொடுத்து காட்டினார்களோ என்னவோ!
 
(எப்படி கசக்குறேன் பார்த்தீங்களா...ஆஆஆஈஇ )

மக்களுக்கு அறிஞர் டாக்டர் விஜய்யின் நீண்ட அறிவுரையோடு படம் முடிந்தது. விஷால் போன்ற பொடியன்கள் லோக்கல் ரவுடிகளுடன் இன்னும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது விஜய் ஆஃப்கன் தீவிரவாதிகளோடு மோதுவதன் மூலம் தன் திரைப்பயணத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். தமிழ்ப்படங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் வித்தியாசமான முயற்சிதான் இந்த 'வேலூஊஊஊஊஊஊ வேலாஆஆஆஅயுதம்ம்ம்ம்'!

Wednesday, November 2, 2011

வெல்லும் தமிழ் ஈழம்!

முள்ளி வாய்காலில் இன அடையாளங்களை அழிக்க கடைசி கொள்ளியை வைக்கும் திட்டத்தில் இருந்தது இலங்கையின் இன வெறி அரசு. ஓராண்டுக் காலம் இடப் பெயர்வால் பெரும் துயரில் இருந்த மக்களை முள்ளி வாய்க்கால் வந்து சேருமாறு அரசு தரப்பில் கூறினார்கள். குண்டு வீச்சுக்கள் இல்லாத பிரதேசங்கள் என்று சில பகுதிகளும் அறிவிக்கப் பட்டிருந்தன. ஹிட்லர், யூத மக்களை இவ்வாறுதான் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துவருவதாக கூறினான். குழந்தைகளுடன் யூத மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கு வந்து சேர்ந்தார்கள். போர் தந்த கொடுமையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். ஒரு பெரு வெளியின் வாசற்கதவு , அவர்களை தன வாய் திறந்து அழைத்தது. சாட்சியங்கள் எதுவுமே  இல்லாமல் யூத மக்களை கொன்று குவித்த விஷ வாயு கூடம் அது. 

     இலங்கை அரசு அறிவித்திருந்த, குண்டுகள் வெடிக்காத பிரதேசத்திற்கும் அந்த விஷ வாயு கூடங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. விஷ வாயு கூடங்களை நான்கு புறமும் விஷ வாயு வெளியேறாதவாறு அமைத்திருப்பார்கள். 


   யாருமே அங்கிருந்து தப்பிச் செல்லமுடியாது. முள்ளி வாய்க்கால் பிரதேசமும் யாரும் எங்கும் தப்பித்துக் கொள்ளாதவாறு அமைந்த நிலப் பகுதி. ஒரு புறம் நந்திக் கடல் , மறுபுறம் பெருங்கடல் இதற்கு இடைப் பட்ட பகுதியில்தான் மக்கள் சிக்கவைக்கப் பட்டார்கள். 


    ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். இலங்கை அரசு சார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு கூட அங்கு அனுமதி இல்லை. ஏன் ?
சாட்சிகளற்ற பிரதேசமாக இருக்கவேண்டுமென்பது இலங்கை அரசின் உள்ளடி தந்திரம். குறுகிய இந்த நிலப் பரப்பின் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிக்கப் பட்டிருந்தார்கள்.


    மனிதர்கள் இல்லாத வேவு விமாங்கள் அனுப்பப்பட்டு, எல்லா விவரங்களையும் இவர்கள் முன்கூட்டியே சேகரித்துக் கொண்டார்கள். நான்கு புறமும் கவச வாகனப் படைகள் சூழ்ந்து நின்றன. பல் குழல் பீரங்கிகள் தொடர்ந்து அக்னி குண்டுகளை உமிழ்ந்து கொண்டே இருந்தன. வான்வழியே விமானங்கள் எட்டிப் பார்த்து மக்கள் குவிந்துள்ள இடங்களில் குண்டுகளைப் போட்டுக் கொண்டே இருந்தன. பூமி அதிர்ந்தது. கடலலைகள் அச்சமுற்று நின்றன. இதுதான் முள்ளி வாய்க்காலில் தமிழ் மக்கள் சந்தித்த கோரமான கொடுமை. !

    "பிணங்கள் சூழ்ந்த பிரதேசம்
     ஜனக் கடலில் மிதந்தவை
     களத்தில் இரந்தவை
     கண்ட கண்ட இடமெல்லாம்
     வெந்தவை, கிடந்தவை
     அழுகிச் சிதைந்தவை"
என்று  தமிழர் வாழ்க்கைப் பற்றி 1985 ம் ஆண்டு , ஈழத்துக் கவிஞர் மு. பொன்னம்பலம் பாடிய வரிகள்தான், இப்போது ஞாபகத்திற்கு  வருகின்றன.       

    மைந்தர்கள் மட்டும்தான் மரணமடைகிறார்கள். மண்ணுக்கான போராட்டங்கள் மரணமடைவதில்லை. அவை தற்காலிகமாக முறியடிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. 

ஆனாலும் லட்சியத்தின் நுழைவாயிலில் அடியெடுத்து வைப்பதற்கு பல தலைமுறைகள் அவை காத்திருக்கின்றன. எல்லாமே அழிந்துவிட்டதென்று எதிரிகள் நிம்மதி கொள்ளும் நேரத்தில், யாருமே எதிர்பார்க்காத தருணத்தில், அடி மரம் கிளை வெடித்து, தளிர் அவிழ்த்து, பூ பூகத் தொடங்கி விடுகின்றன. ....
பட்ட மரம் துளிர் விடும்  அதிசயத்தைப் போல!


    வரலாறு, அந்தந்த போராட்டங்களுக்கான வசந்த காலத்தை எங்கோ ஓரிடத்தில் மறைத்து வைத்துள்ளது என்பது மட்டும் உண்மை. விழுந்து விட்டதாக கருதப்படும் ஈழ மக்களின் போராட்டத்துக்கான வசந்த காலமும் காலப் பெருவெளியில் எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் செய்யும். 

  ஜனநாயக சுவாசத்தை மானுடத்துக்கு வழங்கியது பிரஞ்சு புரட்சி. ஆதங்கங்கள் அனைத்தையும் கிழித்தெறிந்து , விடுதலை பெற்ற தேசிய இனங்கள் எல்லாம், முழுவதும் அழிந்துவிட்டனவோ என்ற அச்சதிருக்கு பின்னர்தான், உயிர் பிடித்து தலை நிமிர்த்து எழுந்து , தங்கள் வாளுவுரிமையை சாதியப் படுத்திக் கொண்டன. நானூறு ஆண்டுகள் போராடி , தங்கள் உரிமையைப் பெற்ற அயர்லாந்தை இதற்கு உதாரணமாக கூற முடியும். இதைப் போலவே பெல்ஜியத்தில் பிளமிஸ் மக்களும், பின்லாந்தில் பிநீஸ் மக்களும், ஸ்பெயினில் பாஸ்க் மக்களும் தங்கள் தாயக உரிமைக்காக நூற்றாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றியின் விளிம்பை இப்போது தொட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். 

    இன அழிப்பு அரசியல், சித்தரிப்பதைப் போல இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டம் நிகழ்காலத்தின் வன்முறை அல்ல. காலத்தால் அழிந்துபோகாத மண்ணுரிமைப் போராட்டம். வரலாறு அறிந்த காலம் முதல் மண்ணில் கால் பதிதவர்களின் உரிமைக் குரல் இது. இவர்களை விரட்டி அடிப்பது என்றால் யார்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?  முத்துகுமார்களுக்கு உயிர், தமிழ் மக்களின் உரிமைக் காக்கும் ஆயுதம் என்றால், ஈழ மக்கள் உயிராயுதம் எந்த மாட்டார்களா என்ன? மக்கள் பல்லாயிரமாக முள்ளி வாய்க்காலில் நெஞ்சுரம் கொண்டு நின்றாகள். 


      இலங்கை மண்ணில், பழங்காலத்திலேயே தமிழ் மக்கள் வேர் பிடித்து வளர்ச்சி பெற்றிருந்தார்கள். தமிழ் மக்களின் பண்பாட்டைப் போலவே, அந்த மண்ணில் ஆழ புதைந்து கிடக்கும் புதைப் பொருள்களும் கல்வெட்டுகளும் அதற்கான ஆதாரத்தை தருகின்றன. தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து 70000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த இலங்கைத் தீவு, தமிழ் தோல் குடிகளை தம் மார்பில் வளர்த்தெடுத்த தாய்தான்  என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி படக் கூறுகிறார்கள். 
   
    சிந்து சமவெளி நாகரிகத்தை விட தாமிர பரணி கரை அமைந்த ஆதிச்ச நல்லூர், முந்தையது என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதிச்ச நல்லூர் மண்பாண்டங்களில் காணப்படும் எழுத்துக்களும் ஈழத்தில் காணப்படும் மண்பாண்ட எழுத்துக்களும் உருவ ஒற்றுமையில் ஒன்றுபோல இருக்கின்றன. இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சி, சம காலத்தில்தான் வளர்ந்து வளர்ச்சி பெற்றுள்ளது. ஐரோப்பியர்கள் இலங்கையை கைப் பற்றிக்கொள்ளும் வரை தமிழ் மக்களுக்கென்று ஒரு தனி நாடு, இலங்கையில் இருந்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள். 

    மானுடத்தை வெட்கித் தலை குனியவைத்த முள்ளி வாய்க்கால் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையும் உலக சமுதாயமும் தடுக்க முடியாத குற்றத்திற்காக இன்று தலை குனிந்து நிற்கின்றன. இது போற்குற்றம்தான் என்று உலக மனித உரிமை அமைப்புகள் ஒன்று கூடி ஒரே குரலில் சொல்லுகின்றன. தொலைக் காட்சிகளில் இந்த கொடுமையைப் பார்த்தவர்கள், செய்திகளாக இதைப் படித்தவர்கள் , உறக்கமற்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராஜபக்சேயின் உலகம் அதை வெற்றிக் கொண்டாட்டமாக மாற்றி விட்டது. தமிழ் மக்களின் அழிவு பற்றிய வெற்றிப் பாடல்களை அங்கு பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
      வெற்றி அடைந்தவர்களுக்கு பாடல்கள் உண்டு என்றால், தோற்றுப் போனவர்களுக்கு மட்டும் பாடல்கள் இல்லையா? வெற்றிப் பாடல்கள போதை கொண்டு மயக்கத்துடன் நடன அரங்குகளில் வெறி பிடித்து ஆடுகின்றன. தோற்றுப் போனவர்களின் பாடலோ, வைராக்கியத்தை நெஞ்சில் சுமந்து மரணத்தில் இருந்து புதியப் பிறப்பை கரு கொண்டு, பெற்றெடுக்க சூழ் வலி கொண்டு நிற்கிறது.

      "வீழ்வேனென்று நினைத்தாயோ"   என்று முள்ளி வாய்க்கால் விதைப்பதை விதைத்து முடித்துவிட்டு, அறுவடைக்காக காத்து  நிற்கிறது!


                                                                                                                  -வெல்க தமிழ் ஈழம்!









 

Monday, October 24, 2011

வெல்லும் தமிழ் ஈழம்..! (வீழ்வேனென்று நினைத்தாயோ)


"ஆட்லறி என்று சொல்லப்படும் எறிகணை வானத்தில் வேகமாக வருவது மட்டும்தான் எனக்குத் தெரிகிறது. நான் வீழ்ந்துவிட்டேன். ஆனாலும், என் நினைவை நான் இழக்கவில்லை. இடப் பெயர்வு காலம் முழுவதும்  என்னுடன் இணைந்து பயணம் செய்து வந்த இரண்டு நண்பர்கள் பக்கத்தில் இறந்து கிடக்கிறார்கள். நான் எழுவதற்கு கஷ்டப்பட்டு முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் முடியவே இல்லை. வயிற்றில் ஏதோ பிசு பிசுப்பதை போல உணர்கிறேன். தொட்டுப் பார்த்தால் ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அருகில் ஆள், அரவம் எதுவுமே இல்லை எங்கு  பார்த்தாலும் பிணங்கள் குவியல் குவியலாக என் கண்ணுக்கு மங்கலாக தெரிகிறது. மெதுவாக எழுந்து செல்கிறேன். வீதி ஒன்றில் மயங்கி நான் கிடந்திருக்க வேண்டும். லேசாக மயக்கம் தெளிந்தபோது, மருத்துவ துறையை சேர்ந்த இரண்டு பேர் பேசிக்கொள்வது என் காதுகளுக்கு கேட்கிறது..." முள்ளி வாய்க்கால் பேரழிவில் கடைசி நேரத்தில் உயிர் தப்பிய ஒருவர் அளித்த  வாக்கு  மூலத்தின் முன்னுரை இது!

     உயிர் தப்பியவரின் பெயர் முருகன். மேலும், அவருடைய வாக்குமூலத்தில் இருந்து சில கண்ணீர் வார்த்தைகளை இதயம் கொண்டு படியுங்கள். "மருத்துவ பணியாளர்கள் இரண்டு பேர் பேசிக்கொள்கிறார்கள். இருவருமே இளைஞர்கள்தான் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. மயங்கிய நிலையிலும் இவர்கள் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது. 
    "இவர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவருடைய உடம்பு ரொம்பவும் சேதம் அடைந்துள்ளது." என்று மருத்துவப் பணியாளர்களில் ஒருவர் கூறுகிறார். அதனை மறுத்து இன்னொரு பெண்மணி "அவர் சாக மாட்டார். பாதிப்பு உடலில் இல்லை. மூத்திரப் பையில் மட்டும்தான்" என்கிறார். எனக்கு அவர்கள் சிகிச்சை அழிப்பது போல தெரிகிறது. நான் மயங்கி கிடந்தேன். 

    நான் கண் விழித்தபோது யாருமே அங்கு இல்லை. எனக்கு மருத்துவம் அளிக்கப்பட்ட இடம் எறிகணைகளால் தாக்கப் பட்டிருப்பதை என்னால்  யூகித்துக் கொள்ள முடிந்தது. என்னைச் சுற்றிலும் பல உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. எல்லா இடங்களிலும் ரத்தமும் சதை துண்டுகளுமாக காட்சியளிக்கின்றன. நான் எழுவதற்கு பெரிதும் முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் முடியவே இல்லை. மனதை தைரியப் படுத்திக் கொண்டு அனைத்தையும் கடந்து எழுந்து செல்கிறேன். எப்படியோ பதுங்கு குழிக்குள் வந்து விட்டேன். அங்கே இருந்த எல்லோருமே காயப் பட்டு இருக்கிறாகள். இன்னமும் எரி கணைகள் பதுங்கு  குழிகளுக்கு உள்ளும் வெளியிலும் விழுந்து வெடித்துக் கொண்டே இருந்தன. அதற்குள் உட்கார்ந்தால் மரணம் நிச்சயம். எனவே, பதுங்கு குழியை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு அனைவருமே  வந்து விட்டார்கள்.
    நடக்க முடியாதவர்கள், நகர முடியாதவர்கள் என்று பலரும் அங்கு இருந்தனர். நான் பதுங்கு குழியை விட்டு வெளியேறுவதா அல்லது மரணத்தை நேருக்கு நேர்  சந்திக்க அங்கேயே தங்கி விடுவதா என்ற குழப்பத்தில் இருந்தேன்.
     இதற்கு என் தம்பி தான் காரணம். உடன் பிறந்தவர்களில் கடைசியில் பிறந்தவன் அவன். அவன் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்து இருந்தான். அவனை சுமந்து கொண்டுதான் செல்ல வேண்டும். சுமந்து  செல்வதற்கு என் உடல் நிலை இடம் தராது என்பதை என் தம்பியும் நன்கு உணர்ந்தே இருந்தான். என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. 
    குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து  கேட்டுக் கொண்டே இருந்தது. என் தம்பி என்னை வேகப்படுத்தினான். "நீங்கள் போய் விடுங்கள் அண்ணா. கடைசி நேரத்தில் என்னை காப்பற்றி விடுவார்கள். நான் பிழைத்துக் கொள்வேன்." என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்லிக் கொண்டே இருந்தான். ஒரே அடியாக எல்லோரும் நிர்பந்தித்து என்னை வெளியேறும்படி வற்புறுத்தினார்கள். தம்பியின்  மோசமான நிலையைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து வெளியேற மனமே இல்லாமல் கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். அங்கிருந்து முகாம் வந்து , மருத்துவ சிகிச்சைப் பெற்றேன். தொண்டு நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டை எனக்குப் பெரிதும் பயன் பட்டது. அதை வைத்து முகாமை விட்டும் வெளியேறி விட்டேன். 
     இன்று உயிர் ஆபத்து நீங்கி, வாழ்க்கை ஒருவிதமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றாலும்., கடைசியில் முகாமை விட்டு வெளியேறும் தருவாயில் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. நான் பதுங்கு குழியை விட்டு வெளியேறியப் பின்னர் , இராணுவம் அங்கு வந்ததாகவும் வெளியேற முடியாமல் உடல் பாதிக்கபட்டு  பலத்தக் காயங்களுடன் அங்கேயே இருந்த அனைவரையும் இராணுவம் இயந்திர துப்பாகியால் சுட்டு விட்டு அப்படியே மண்ணை போட்டு மூடி விட்டதாகவும் செய்தி கிடைத்தது" என்று முடிகிறது முருகனின் வாக்குமூலம்!
   இதை வாசிக்கும் போதே வலிக்கிறதே...அதை அனுபவித்த முருகனின் வேதனை எப்படியிருக்கும்? 
    இப்படி யோசித்த நேரத்தில்தான் தமிழ்வாணி என்ற பெண்ணைப் பற்றி தெரியவந்தது. அவரது வேதனை அதீத வேதனையாக இருந்தது!
    தமிழ்வாணி....பிரிட்டனில் பயோ மெடிக்கல் படித்த பட்டதாரி. ஈழத்தில் பலமுறை இடப் பெயர்வுக்கு உள்ளாகி 1994 ம் ஆண்டு யாழ்பாணத்தை விட்டு ப்ரிட்டைனுக்கு  குடியேறி பட்டப் படிப்பை முடித்தவர். இறுதி யுத்தம் நடக்கும் போது ஈழத்தில்தான் இருந்தார். யுத்தப் பிரதேசத்தில் இவர் சிக்கிக் கொள்கிறார். இதற்காக அச்சம் கொண்டு பயத்தில் உறைந்து போகாமல், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மருத்துவப் பணிகள் செய்யத் தொடங்கி விடுகிறார். 
    யுத்தம் முடிந்த பின்னர் சந்தேகத்தில் முகாமில் வைத்து நான்கு மாதங்கள் விசாரிக்கப் படுகிறார். உலகம் முழுவதிலும் மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தின. பிரிட்டன் அரசாங்கமும் தனது நாட்டின் குடியுரிமைப் பெற்ற ஒருவரை விடுவிக்க வேண்டும் என்றது. கடைசியில் விடுவிக்கப் பட்டு பிரிட்டன் போய் சேர்ந்தார். முள்ளி வாய்க்காலில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதை உலகுக்கு தெரிவிப்பதில் முக்கிய நபராக தமிழ்வாணி இன்று கருதப் படுகிறார். 
    "போர் 2008  மே மாதம் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. குறுகிய நிலப் பரப்பில் குவிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன என்ற கவலை உலக சமுதாயத்தை கவ்விக் கொண்டது. மக்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று மனித நேயம் உள்ளவர்கள் துடித்துப் போனார்கள். 
     அப்போது இலங்கை அரசு "குண்டுகள் வெடிக்காத அமைதிப் பிரதேசங்களை உருவாக்கி , அதில் பொதுமக்களில்  ஒருவரைக் கூட சாக விடாமல் பாதுகாப்போம்." என்று ஐக்கிய நாடுகள் சபைக்கும் உலக சமூகத்துக்கும் ஒரு வாக்குறுதியை  அளித்தது. அது வஞ்சகமான வாக்குறுதி. 
     நந்திக் கடலுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதிதான் அமைதி மண்டலமாக  அறிவிக்கப்பட்டது. புதுமாதலன் முதல் வேல் முள்ளி வாய்கால் வரை பல கடலோர கிரமாங்களை உள்ளடக்கியப் பகுதி அது. இங்கு மக்கள் லட்ச கணக்கில் வந்து சேர்ந்த பின்னர்தான், இந்த படுகொலை நடந்தது. 
     -இது தமிழ்வாணியின் சாட்சியம். 
     உயிர் ஊசலாட கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி நகர்ந்து, கடைசியில் உயிர் நின்று போன மருத்துவமனைகளைப் பற்றி தமிழ்வாணி கூறியுள்ளவை நம் ரத்தத்தை உறையவைக்க கூடியவையாக   உள்ளது.
    "மரத்தடி , மருத்துவச் சிகிச்சைக்கான இடமாக மாறியது. பின்னர், அறுவை சிகிச்சைகளை எங்கு நடத்துவது... அதுவும் அங்கேதான். கை, கால்களை அகற்றினால்தான்  உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நிலைக்கு பலரும் வந்து விட்டார்கள். காயம் பட்டவர்கள் குவிந்து கிடக்கிறார்கள். ஒரு சில மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் மட்டுக்தான் எஞ்சி இருக்கிறோம்.
     அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும். மருந்து இல்லை. இருக்கிற மருந்தில் தண்ணீர் கலந்து மருந்தை கொடுத்துப் பார்க்கிறோம் . ஒரு கட்டத்தில்  அதுவும் இல்லாமல் போய் விடுகிறது. மயக்க மருந்து இல்லாமலேயே இல்லாமலேயே அறுவை சிகிச்சை நடை பெறுகிறது. இரத்தம் கொட்டு கிறது. அதை அப்படியே பிளாஸ்டிக் பைகளில் பிடித்து , இரத்தத்தை யார் வெளியேற்றினார்களோ அவர்களுக்கே மீண்டும் ஏற்றுகிறோம். காயம் பட்டவர்களுக்கு கட்டுப் போடுவதற்கு. பழைய கந்தல் துணிகளையும் புடவைகளையும் பயன் படுத்துகிறோம். 
    மருத்துவ விஞ்ஞானத்தால் இதனை நம்ப முடியாது என்றாலும் முள்ளி வாய்க்கால்  யதார்த்தம் இதுதான். அறுவை சிகிச்சைக்கு தேவையான கத்திக் கிடைக்காமல் போனதால்...என்ன செய்வது என்கிற இக்கட்டான சூழலில் கறி வெட்டுவதற்காக பயன்படுத்தப் படும் கசாப்புக் கடை கத்திகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தோம். " என்கிறார்  தமிழ்வாணி. 
    இதைப் போலவே அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட மனித அவயங்கள் ஒருபுறம் கவனிப்பார் அற்று குவித்து கிடந்தன என்பதையும் யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியுமா? அதுதான் முள்ளி வாய்க்காலில்  மக்களோடு சேர்ந்து மரணமுற்ற மருத்துவத்தின் கதையுமாகும். 
                                                                                                              ( விதைப்போம் )

Friday, October 21, 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ..!

அந்த அறிக்கை 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. முழு அழிவு நடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான அறிக்கை அது. இடம் பெயர்ந்த தமிழ் மக்கள், முற்றாக அழிந்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்ளத் தக்க வகையில் தாக்குதல் தொடுக்கப் பட்டிருந்த நேரம் அது. வெகு மக்களுக்கான உணவை வாங்கும் பொறுப்பைப் பெற்றிருந்த முல்லைத் தீவு மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்தான் அந்தக் கடிதத்தை எழுதி இருந்தார். மனித துயரங்களை காண சகிக்க முடியாமல் அவர் எழுதிய இந்தக் கடிதம்,  மன சாட்சி உள்ள மனிதர்களை உலுக்கி எடுத்து விடுகிறது. 
     "உணவு கிடைக்காமல் தொடர்ந்து மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். காட்டுக் கிழங்குகளையும் இழை தழைகளையும் உண்டு , உயிர் பிழைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனாலும், தங்களின் சாவை அவர்களால் நிறுத்த முடியவில்லை. பட்டினி சாவுகள் அதிகரிக்கின்றன. மருத்துவ மனைக்கு தூக்கி வரப் படுகிறவர்களில் பலர் இறந்தேதான் கொண்டு வரப் படுகிறார்கள். இவர்களில் பெரும் பாலானோர் பட்டினியால் செத்தவர்கள் என்று கண்டறியப் பட்டுள்ளது. இது நாளாக நாளாக இன்னமும் கூடுதலாகலாம்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த, பட்டினியால் செத்து போனவர்களை மட்டும்தான் எங்களால் கணக்கிட்டு சொல்ல முடிகிறது. மற்றவர்களை இந்த கணக்கில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மைதான். ..... பதுங்கு குழிகளில், சாலைகளில், புதர் மறைவிடங்களில் இருந்தபடி பசித் தீ பற்றிக் கொள்ள அப்படியே சாய்ந்து மரணமுற்றவர்களின் கணக்கு யாரிடம் இருக்கிறது? 
     பட்டினி ஒரு வன்முறை. ஆதிக்க சக்திகள் தங்கள் அதிகாரத்துக்கு, வெகு மக்களை அடிமைப் படுத்திக் கொள்ள பட்டினி போட்டு பார்கிறார்கள். இன ஒடுக்கு முறையின் மூலம் தமிழ் மக்களை அடிமையாக்கி கொள்ள மோன்று வரும் இலங்கை, குண்டு போட்டு அழிப்பதற்கு இணையாக பட்டினி போட்டு அழிப்பதையும் ஒரு கொள்கையாகவே உருவாக்கி வைத்துள்ளது. உள்நாட்டுப் போரும், இடப் பெயர்வும் பதுங்கு குழிகளும் வெளி உலகுக்கு எதுவுமே தெரியாமல் பட்டினி கொலை செய்வதற்கு, இலங்கையின் இன வெறி அரசிற்கு வசதி செய்து கொடுத்து விட்டது. 
     முள்ளி வாய்க்காலுக்கு முந்தைய இடப் பெயர்வு காலத்தில், போர்களத்தில் சிக்கியுள்ள மக்கள் தொகையைப் பற்றி, இலங்கையின் இராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. 2009 ம் ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் வெளியான இந்த அறிக்கையின் படி, 70000 மக்கள் இருந்ததாக சொல்லியிருந்தாகள். இது உண்மையானது தானா என்ற கேள்வி எழுந்தபோது, மற்றொரு தகவல் கிடைத்தது. அந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியைத் தரதக்கதாக இருந்தது. அரசாங்கம் வகுத்திருந்த அருவருக்கத் தக்க சூழ்ச்சி ஒன்று அதில் மறைந்து இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. 
    ஆட்சியாளரின் கணக்கெடுப்பின் படி , 2008 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் கிளிநொச்சி , வன்னி ஆகிய இரு மாவட்டங்களின் மொத மக்கள் தொகை 420000 . நான்கு மாதங்களில் இது எவ்வாறு 70000 ஆக குறைந்து போனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இலங்கை அரசுதான் பொறுபேற்றுள்ள உணவு விநியோகத்தைக் குறைத்துக் கொள்ளவும், ஐக்கிய நாடுகளின் சபையின் வழி காட்டுதலில் வழங்க வேண்டிய உணவுப் பொருட்கள் பாதிக்கப் பட்ட மக்களுக்கு செல்வதை தடுக்கவும், இப்படி பொய்யான புள்ளி விவரத்தை வெளியிட்டு இருந்தது. பட்டினியால் மக்கள் செத்துப் போக வேண்டும் என்பதை தவிர, இதில் வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ?
    பட்டினி saavup பற்றிய இந்த அறிக்கைப் போலவே உணவு கையிருப்பு பற்றிய மற்றொரு அறிக்கையும், வன்னியில் இருந்து இலங்கை அரசுக்கு அனுப்பபட்டிருந்தது. கிளி நொச்சி மண்டபத்தில் உணவுப் பொருள் வழங்கும் துறையின் துணை இயக்குனர் அனுப்பிய அவசர அறிக்கை அது. இதை ஒரு அபாய அறிவிப்பு என்றுதான் கருத வேண்டும். 2009 ம் ஆண்டு பெப்ரவரி 2009 ம் தேதி இந்த அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 83000 ம் குடும்பங்களுக்கு உணவு அளிக்க வேண்டிய poruppu எனக்கு இருக்கிறது. இதற்க்கு 4950 மெட்ரிக் டன் எடை உள்ள உணவுப் பொருட்கள் தேவை. ஆனால், கையிருப்பில் உள்ளது 110  மெட்ரிக் டன் மட்டுமே" என்று கூறுகிறது அந்த அவசர அறிக்கை. இதை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால்,  மக்களின் தேவையில் அரை சதவிகித உணவு கூட அவர்களின் கையிருப்பில் இல்லை என்று தெரிகிறது. அதைக் கிட்டத் தட்ட உணவற்ற நிலை என்றுதான் கூறவேண்டும். இது பிப்ரவரி மாத கடைசி nilavaram என்றால் , யுத்தத்தின் இறுதிக் கட்டமான மே மாத இரண்டாவது , மூன்றாவது வாரங்களில் என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடிவதில்லை. 
     ஒரு பிடி உணவுக்காக அந்த மக்கள் பட்ட அவலங்கள் வார்த்தைகளில் விவரிக்க கூடியவையாக இல்லை. வயது முதிர்ந்த தாய் ஒருத்தி தாம் அடைந்த துயரங்களை இணைய தளம் ஒன்றில் பதிவு செய்திருக்கிறாள். தாது வருடப்  பஞ்சம் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  வறண்டு வெடித்த நிலங்களில் நீர் அற்றுப் போக, மாட்டுக்கு வைக்கப் படும் தவிட்டில் ஒளிந்து இருக்கும் அரிசிக் குருணையை தேடித் பிடிக்க alainthu திரிந்ததாக கதைகள் உண்டு. தவிட்டை மேலும் மாவாக்கி அதை அடுப்பில் சூடேற்றி கோரப் பசியைத் தனித்துக் கொண்டதாகவும் பஞ்சம் பற்றிய தகவல்கள் கூறுகின்றன. ஈழப் போரில் கடைசிக் கட்டத்தில், தாது வருஷத்துப் பஞ்சத்தை விட உணவுப் பஞ்சம் கூடுதலாகிவிட்டது என்பதை அந்த thaayin வார்த்தைகள் உறுதிப் படுத்துகின்றன. 
    "நஞ்சை வயல் வெளிகள் அமைந்த வன்னி நிலப் பரப்பில் அரைத்து நெல்லை அரிசியாக மாற்றித் தரும் ஆலைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஒதுக்குப் புறங்களில் நெல் அரைத்த தவிடும், உமியும் அம்பாரமாக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. உணவு இன்றித் தவித்த நாங்கள் , அதைப் பார்த்தோம். பெண்கள் பெரும் கூடமாக விரைந்து சென்றோம். தவிடு , உமி நடுவே கொஞ்சமேனும் அரிசி கிடைக்குமா என்றுப் பார்த்தோம். காற்றில் தூற்றிப் புடைத்துப் பார்த்து அதிலிருந்து அரிசிக் குருனையைப் பிரித்து எடுப்பதற்கு பெரும் பாடு பட்டோம். 
    உச்சி வெயிலில் பூமி அனலை கக்கி கொண்டு இருக்கிறது. இரைச்சல் கேட்கிறது. விமானமா? எல்லோரையும் திகில் பற்றிக் கொண்டது. வயிற்றுப் பசியா..அல்லது மரணமா .. ? பசியால் துடி துடிக்கும் பொடுசுகளைப் பற்றிதான் யோசனை. குண்டுகள் விழுந்து, செத்தாலும் பரவாயில்லை என்று மன பயத்தை அடித்து துரத்தி விட்டு, குழந்தைகள் உயிர் பிழைக்கும் ஒரு குவளை கஞ்சிக்காக, அந்த தவிடும் உமியும் குவிந்து உள்ள பொதிகளோடு போராட்டம் நடத்தினோம். சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வைப் பெருக்கெடுத்து ஓடியது. உடல் கலைத்து, கண்கள் இருளடைந்தன. புடைக்கும் murathai இறுகப் பற்றிக் கொண்டோம். நம் சந்ததி உயிர் பிழைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன்" என்கிறார் அந்த வயது முதிர்ந்த தாய்.
    நான்கு மணி நேரம் புடைத்து எடுத்தாலும் இரண்டு படி அரிசி குரனையை சேகரிப்பதில் கூட மிகவும் கடினமானதே. என்று அவர்கள் கூறுகிறார்கள். கிளி நொச்சியில் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அவர்கள் புறப்பட்டபோது , ஒரு கிலோ அரிசி 40  விற்றதாக கூறப் படுகிறது. மே மாதம் 10  ம் தேதிக்கு மேல் , ஒரு கிலோ அரிசி 1000  ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. கடைசி நேரத்தில் குடும்பத்தின் பசியைப் போக்க தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிள்-ஐ விற்று , இரண்டு படி அரிசியை ஒருவர் வாங்கினார்  என்ற தகவல் நமக்கு மயக்கத்தை  வரவழைக்கிறது
                                                                                                                            (விதைப்போம்)
 
 


Friday, October 14, 2011

இரு நண்பர்களுக்கான உரையாடலில் இருந்து...

சசி : இந்தியாவிற்கு எப்படி சுதந்திரம் கிடைக்க அப்போ எப்படியெல்லாம் கஷ்டப்பட்டமோ அப்படி தமிழ் ஈழம் கிடைக்க நம்மாலான உதவியை செய்யணும்...ஆங்கிலேயன் செஞ்சதை தான் சிங்களவன் செய்யிறான்...

சுகா: yes u r right .. எவ்வளவு ஊடகங்கள் மூலமாக ஈழ மக்களின் துயரங்களை சொன்னாலும் தமிழர்களுக்கு கிரிக்கெட்டும் உள்ளூர் அரசியளும்தான் முக்கியமானதாக இருக்கிறது..

சசி:நம்மை உரிமையை எப்படி கொஞ்சம் கொஞ்சமா பறிச்சு இறுதியில நம்மளை அடிமை ஆக்கினானோ அதே வேலைதான் சிங்கள காடையர்கள் செயிறாங்க...ஹிட்லர் அ விட மோசமான சித்ரவதை கொடுமையை அங்கே இருக்கிற தமிழ் மக்கள் குறிப்பா தமிழ் பெண்கள் அனுபவிக்கிறாங்க...

சுகா: விகடனில் நானும் படித்தேன் . வீழ்வேனென்று நினைத்தாயோ... நல்ல புனைவு

சசி:  இந்த உலகத்துல இதுக்கு மேல ஒரு சித்ரவதை இல்லைன்ற அளவிற்கு ராஜபக்ஷே செஞ்சிட்டு இருக்கான்...இதுக்கு ஒரு முடிவு இணையப் புரட்சியாள முடியும்...

சசி :  ஆமா..ஆனந்த விகடனில் வரும் வீழ்வேனென்று நினைத்தாயோ நம்மள மறுபடியும் யோசிக்க வைக்கும்.

சுகா: தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக ஒன்றுபட வேண்டும்!

சசி : எப்படி பாகிஸ்தானுக்கிட்ட இருந்து பங்களாதேஷ் விடுதலைக்கு இந்தியா உதவுச்சோ...அந்த மாதிரி தமிழ் ஈழத்துக்கு நாம கண்டிப்பா உதவனும்...

சுகா: ஆனா மத்தியில் காங்கிரஸ் இருக்கிற வரைக்கும் அது நடக்காது..

சசி: இல்லையென்றால் சீனாவோட உதவியோட...நம்மள நம்ம இந்தியாவை எதிர்க்க எப்பவும் தயாரா இருக்கான்...அந்த சிங்கள இன வெறியன்...

சசி:  நல்லா சொன்ன..இனி காங்கிரஸ் ன்ற கட்சியே இருக்கக் கூடாது..இதை தான் காந்தி அப்பவே சொன்னார்..விடுதலை அடைந்தபிறகு எதுக்கு இன்னும் இந்த கட்சி என்று...எந்த நோக்கத்துக்காக ஆரம்பித்தோமோ அதை அடைந்து விட்டோம் ..இனி இந்த கட்சியை கலைத்து விடலாம்னு...நேரு கேட்கலை...போதும்..காங்கிரஸ் நாடாண்டது..

சுகா: உண்மைதான் ....

சசி: அன்னா ஹசாறேவோட ரெண்டு உண்ணாவிரதுமும் தோற்றுவிட்டது...பார்த்தியா..இப்போ அவரே அங்கே இருக்கும் மக்கள்கிட்ட சொல்லிடு வராரு..காங்கிரஸ் சுக்கு வோட்டு போடாதிங்க ன்னு...
சசி:  மிகப் பெரிய அயோக்கிய கட்சி காங்கிரஸ்...

they should be kicked out...


கால நேரங்கள் மாற வேண்டும்..
இந்த கால கழிசல்கள் தீர வேண்டும்..
புது நாளாய் யாருக்கும் மாற வேண்டும்..
நம் தமிழர்கள் வாழ்வில் புது அரசியல் மலர்வினைக் காண வேண்டும்! 










Thursday, October 13, 2011

நான் படித்ததிலிருந்து.. (வீழ்வேனென்று நினைத்தாயோ... !)

அது ஒரு நீண்ட பயணம். மானுடம் எத்தனையோ பயணங்களை நிகழ்த்தி இருக்கிறது. இது போன்ற பயணத்தை இதற்கு முன்னர் யாராவது நிகழ்த்தி இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.. முடிவற்ற பயணத்தை தொடங்கி விட்டார்கள் ஈழத் தமிழர்கள்.. ஆனால் இது அவர்கள் விரும்பிய பயணம் இல்லை.. கட்டாயப்படுத்தி, அவர்கள் மீது திணிக்கப்பட்ட பயணம்...வான்வெளியில் இருந்து விமானங்களும் தரை வழியாக பீரங்கிகளும் அவர்களை துரத்த... மூச்சுவிடக்கூட நேரம் கிடைக்காமல் புறப்பட்ட பயணம். மனைவி, மக்கள், வயது முதிர்ந்த தாய் தந்தை என்று அனைவரையும் வண்டியில் ஏற்றுகிறார்கள். சைக்கிளா, மோட்டார் சைக்கிளா, மாட்டு வண்டியா, டிராக்டரா என்று யோசிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. அவரவர்களிடம் எது இருக்கிறதோ அதில் பயணத்தை தொடங்கி விட்டார்கள். பயணத்தின் திசை எது? முடிவு எது என்பது தெரியாமலேயே புறப்பட்டு விட்டார்கள். ஆனாலும், அவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கியே திட்டமிட்டு நகர வைக்கப் படுகிறார்கள். செப்டம்பர் 2008  முதல் வாரத்தில் இவர்களின் பயணம் தொடங்கி இருக்க வேண்டும்.
     கிளிநொச்சி யில் புறப்பட்டு முள்ளி வாய்கால் வந்து சேருவதற்கு இவர்களுக்கு ஒன்பது மாதங்கள் தேவைப் பட்டன. 
      நீண்ட இடப் பெயர்வு வாழ்க்கை தந்த மனக் காயங்களை, இன்றுவரை மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒருவரை நேரில் சந்திக்க நேரிடுகிறது. ஒடிந்து பொய் கிடக்கும் அந்த மனிதரிடம் சில கேள்விகளை கேட்கிறேன், இடப் பெயர்வு பயணம் பற்றி. தடை எதுவும் இல்லாமல் பேசத் தொடங்கி விடுகிறார். நாங்கள் ஓரிடத்தில் தங்குவதற்கான காலத்தை நிச்சயம் செய்வது போர் விமானங்களும் குண்டுகளும் தான் என்று கலக்கத்துடன் சொல்லத் துவங்கிய அவர், அடுத்துக் கூறியவை எனக்குள் வியப்பை தருகிறது.  "இடப் பெயர்வில் எதை மறந்தாலும், கடப்பாரை, மண் வெட்டி, கூடை, கோணிப் பைகளை எடுத்துச் செல்ல மறப்பது இல்லை" என்கிறார்.
     ஆதரவற்ற அந்த மக்களுக்கு உயிர் காக்கும் கவசங்களாக இருப்பவை அந்தக் கருவிகள்தான். எந்த இடத்துக்கு கால் கொண்டு பொய் சேர்க்கிறதோ அங்குப் படுத்துக் கொள்ள ஒரு பதுங்கு குழியை அமைத்துக் கொள்ள இந்தக் கருவிகள்தான் கை கொடுக்கின்றன என்பதால், இவை அவர்களை காக்கும் கருவிகள்!
     பதுங்கு குழிகளை பொதுவாக 'பங்கர்ஸ் ' என்று அந்த மக்கள் அழைக்கிறார்கள். மண் பிளந்து, வியர்வை சிந்தி, மண்ணுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். அவற்றை சுற்றி, நான்கு ஓரங்களிலும் மணல் நிரப்பப்பட்ட மூடைகளை அடுக்கி வைத்து, மண் சரிவை தடுப்பதற்கு கோணிப் பைகள் தேவைப் படுகின்றன. 
     பதுங்கு குழிகள் பரிதாபத்திற்கு உரியவை. வான் மழைக்கும் விமானங்களின் குண்டு மழைக்கும் இடையில், இருவித தாக்குதல்களை மாறி மாறி சந்தித்துக் கொண்டு இருக்கின்றன அவை. குண்டு விழும் கொடுமைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது என்று கூறியவர், "வன்னி பிரதேசத்து தீவிர மழை, நொடிப் பொழுதில் பெரு வெள்ளத்தை உருவாக்கி விடும். பதுங்கு குழிகள் பள்ளம் என்பதால், கண் மூடி , கண் திறப்பதற்குள் அனைத்தையும் நீரில் மூழ்க வைத்து விடும்" என்கிறார்.
     "பதுங்கு குழிகளில் சமையல் செய்ய இயலாது. பூமியின் மேற் பரப்பில்தான் தற்காலிக அடுப்புகளை உருவாக்கி, சமையலை தொடங்க வேண்டும். வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே, எம் பெண் மக்கள் அடுப்பை பற்ற வைப்பார்கள். அடுப்பு சூடேற பாத்திரத்தில் உள்ள அரிசியும் நீரும் கொதிக்க தொடங்கும். ஒரு சமயம் சமையலை முடிக்கும் தருணம், பசி எடுத்த குழந்தைகளின் அழு குரல் கேட்கிறது. உணவு வரும் என்று பதுங்கு குழிக்குள் மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். வானத்தில் விமானத்தின் உறுமல் கேட்கிறது. குண்டுகள் சீறி விழும் சத்தம் கேட்கிறது. காதைப் பொத்திக் கொள்கிறோம். அமைதி திரும்பிய சிறிது நேரம் கழித்துச் சென்று பார்க்கும் போது, அடுப்பு இருந்த இடத்தில ஒரு பள்ளம் இருக்கிறது. அன்று இரவு முழுவதும் பதுங்கு குழிக்குள் இருந்தவர்கள் அனைவரும் பட்டினிதான்" என்கிறார் சோகமாக. 
     பதுங்கு குழியில் திலீபன் என்ற பதினாறு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கொடுமைகளை கேட்போம்...
     திலீபன் துடிப்பானவன். ஈழ மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போராளி திலீபனின் நினைவாக, இவனது பெற்றோர் இந்தப் பெயரை சூட்டியிருக்க வேண்டும். ஈழ மக்கள் பண்பாட்டு பெயர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். இதற்கான முன்னுதாரணமாக திலீபனின் பெற்றோரைக் கூற முடியும். இத்தாலியில் பிறந்த இவனை தமிழ்ப் பண்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்பதற்காக தாய்நாட்டுக்கு அழைத்து வந்தனர். 
     அன்றுதான் தைப் பொங்கல். வெளியே மழை சாரல். துரு துறுவென்று பறந்து திரியும் திலீபனால் பதுங்கு குழியில் அடைந்து கிடக்க முடியவில்லை. இவனது பதுங்கு குழி சாலைப் போக்குவரத்துக்கு அருகில் இருக்கிறது. நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கையில் குடையுடன் புறப்படுகிறான் அவன். நண்பர்களோடு நீண்ட நேரம் உரையாடி மகிழ்ச்சி கொள்கிறான். காலத்தில் திரும்ப வேண்டும் என்று அம்மா சொன்னது அவன் நினைவிற்கு வருகிறது. வன்னிப் பிரதேசத்தின் மழைக்கால பசுமையும் வானம் மெல்ல தூறிக் கொண்டு இருந்த அந்த மாலையில், மனமகிழ்ந்து நடந்து வரும் வேளையில்தான், இதயத்தைக் கிழித்து எரியும் அந்தக் கொடுமையும் நடந்தது. 
     தாயும் தந்தையும் பதற்றம் கொண்டு, அவன் வருகைக்காக பதுங்கு குழியில் வாசலில் காத்து இருக்கிறார்கள். மகன் வருவது தெரிகிறது. முகத்தில் மகிழ்ச்சிப் பொங்க, அவனை அழைத்துச் செல்ல பதுங்கு குழிக்கு வெளியே நடந்து வருகிறார்கள். அந்த நேரம் பார்த்து எரிகணை ஒன்று வேகமாக வந்து அவர்கள் மீது விழுகிறது. திலீபனின் உடல் சிதைந்து ரத்தம் கொட்டுகிறது. அவன் அந்த இடத்திலேயே இறந்து விடுகிறான். அவனது தந்தைக்கு காதருகில் காயம். மயங்கி சுய நினைவை இழந்து விடுகிறார். வயிற்றில் சுமந்த மகனை தன கையில் சுமந்து அடக்கம் செய்கிறாள் தாய்.
    மக்களை மட்டும் அல்ல.. பதுங்கு குழிகளையும் பழி தீர்கிறது சிங்கள ராணுவம். ஓரிடத்துக்கு ராணுவம் விரைந்து வருகிறது என்று தெரிந்தவுடன், மக்கள் இடப் பெயர்வுக்கு தயாராகி விடுகிறார்கள். பிறப்பு, இறப்பு முதலான சுக துக்கங்கள் அனைத்திலும் பங்கேற்று உயிருக்கும் பாதுகாப்பு அளித்த பதுங்கு குழிகளை விட்டு அவர்கள் பிரியத் தொடங்குகிறார்கள். ஆனாலும், பதுங்கு குழிகள் நன்றாகவே arinthu இருக்கின்றன... வெறி கொண்டு வரும் ராணுவ டாங்குகளின் பல் சக்கரங்களில் மிதி பட்டு, தாங்கள் இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகிறோம் என்பதை!


                                                                                             --இன்னும் விதைப்போம் 

Monday, October 10, 2011

நான் படித்ததிலிருந்து.. (வீழ்வேனென்று நினைத்தாயோ... !)

இலங்கையோடு இந்திய தேசிய கீதம் முற்றாக வேறுபட்டு நிற்கிறது. வங்கமும், திராவிடமும், மராட்டியமும் , உஜ்ஜையைனியும் இணைந்த பன்மொழி பேசும் மக்களின் ஒற்றுமைப் பாடலாக இந்திய தேசிய கீதம் அமைந்துள்ளது. இலங்கையின் தேசிய கீதம்  மண்ணைப் பற்றி பாடுகிறது. மரத்தை, மலர்களை, அழகைப்பற்றிப் பாடுகிறது. ஆனால், மனிதனைப் பற்றிப் பாடுவதை நிறுத்திக்கொள்கிறது. மனிதனைப் பற்றிப் பாடினால், சிங்கள மனிதனும் தமிழ் மனிதனும் ஒற்றுமையுடன் வாழ்க என்று வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்து விடும். இதனால், மனிதரைப்   பாடுவதையே கள்ளத் தனமாக நிறுத்திக் கொண்டுவிட்டது இலங்கையின் தேசிய கீதம்.

     இன்றைய முகாமில் சித்ரவதிக் கைதிகளாக உள்ள இந்த இளைஞர்கள், இலங்கையின்  வலிமை மிக்க ஆயுதப்  போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.  என்ஹா தேசியக் கொடியின் அரசியல் தவறு என்றும், அதற்கு நாங்கள் அடிபணிய முடியாது என்றும் ஆயுதம் தூக்கினர்களோ அந்த மொழி புரியாத பாடல்களைப் பாடி, அந்தக் கோடியை வணங்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் இப்போது வற்புறுத்தப் படுகிறார்கள். இதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். மறுக்கிறார்கள். சித்ரவதை முகாம் இந்த இளைஞர்களைத் தேசத் துரோகிகளாக அறிவிக்கிறது. ஆத்திரம் அடைந்த இனவெறி ராணுவம், இவர்களைச் சித்ரவதை முகாமுக்கு இழுத்துச் செல்கிறது. அங்கு விரல் நகங்களில் ஊசி ஏற்றப்படுகின்றன. கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு, உடலுக்கு உள்ளேயே, எலும்புகள் முறிந்து விழுகின்றன. மின் அதிர்ச்சியால் மீண்டும் மூட முடியாமல் அப்படியே நின்று போகின்றன விழி ஓர இமைகள்.

     மண்ணுரிமை மூச்சை நெஞ்சில் சுமந்த அந்த இளைஞர்கள் தனது இறுதி மூச்சையும் நிறுத்திக் கொள்கிறார்கள். மரணமுற்ற உடல், ஒவ்வொன்றாக சேகரித்து மறைவான இடங்களில் வைக்கப்பட்டு, நள்ளிரவில் எடுத்துச் செல்லப் படுகின்றன. அந்த உடல்கள் ஒவ்வொனுன்றும் சமரசமற்று, உரிமைக்காகப் போராடிய போராட்ட உணர்வுகளை மட்டும் சொல்லவில்லை. அந்த உடல்களின் மீது நடத்தப்பட்ட ஒரு நூறு சித்ரவதைக் கொடுமைகளை சொல்லிவிட்டுத்தான் செல்கின்றன.

      விடுதலைப் புலிகளின் ராணுவம் சாராத பணிகளில் பங்கேற்று இருத்த ஒருவரின் கதை இது. அனாதைப் பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப் பட்டு உள்ளது. இந்தப் பணியை மிகுந்த மனநிறைவுடன் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். அந்தக் காலம் தனக்கான வசந்த காலம் என்று இப்போதும் அவரால் கூற முடிகிறது. பராமரிப்பு இல்லத்தில் பணியாற்றும் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. முள்ளி வாய்க்கால் நிகழ்வின்போது குழந்திக்கு ஒரு வயது நிறைவு பெறுகிறது. போரின் இறுதி நாட்களில் கணவனையும் மனைவியும் பிரிதுவிடுகிரார்கள். குழந்தை மனைவியிடம் உள்ளது.

     சித்ரவதை முகாம் ஒன்றுக்கு, இவன் இழுத்துச் செல்லப்படுகிறான். புலிப் படையில் ஆயுதம் தாங்கிக் களத்தில் இவன் நின்றதாகப் பதிவு செய்து கொள்கிறார்கள். சித்ரவதைகளைவிடவும் பெரும் வதையில் மனம் சிக்கிச் சின்னாப் பின்னமாகிறது. மனைவி, குழந்தை இருவரின் நிலை என்னவாக இருக்கும் என்ற நினைவில், மனதளவில் ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கிறான். நம்பிக்கை யுடனும் நம்பிக்கை அற்றும் இவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது.

     முகாமில் இருந்து, இவனைத் தப்பிக்க வைக்க, ரகசிய ஏற்பாடு ஒன்று நடை பெறுகிறது. கட்டுக் காவல்கள் எல்லாவற்றையும் கடந்து செல்லுதல் அத்தகைய சுலபமானது அல்ல என்றாலும், அவனுக்குச் சொல்லாப்பட்ட அந்த வழிமுறைகளில் எப்படியும் தப்பிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவனுக்குத் தந்து விட்டது. தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன.
       நள்ளிரவு. முகாமில் இருந்து பிரிந்து தனியாக நிற்கிறான். மன படபடப்புக்கு  இடையில் ஒரு சிறு சத்தம், ஒரு வாகனம் வருவதைப் போல உணர்கிறான். அந்த வாகனம் எதுவாக இருக்கும்...தன்னிடம் சொலப்பட்ட வாகனம் தானா? அல்லது முகாமின் நள்ளிரவு அதிரடி கண்காணிப்பு வாகனமா? அவனுக்குச் சிறிது கலக்கம் வந்து விடுகிறது. வாகனம் மிகச் சரியாக அவன் அருகில் வந்து நிற்கிறது. அது ராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனம்தான். அவன் தப்பித்து செல்வதற்கு என்னென்னே செய்ய வேண்டும் என்பது அவனுக்கு முன்னரே தெரிவிக்கப் பட்டு இருந்தது. அதன்படியே அவன் சதம் எதுவும் இன்றி அந்த வாகனத்தில் ஏறிப் படுத்துக் கொள்கிறான். ஏதோ பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டு இருந்த லாரி போன்ற வாகனம் அது.

     முகாம் நான்கு அடுக்குப் பாதுகாப்பு வளையங்களைக் கொண்டது. இவை அனைத்தையும் கடந்து சென்ற பின்புதான், அவனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்படுகிறது. எப்படித் தூக்கம் வந்தது என்றே தெரியவில்லை. தூங்கிப் போனான். திடீர் என்று ராணுவ வாகனம் குலுங்கி நிற்கிறது. கொஞ்சம் வெளிச்சம் தெரிவதில் இருந்து அதிகாலை என்பதை உணர்ந்து கொள்கிறான். சுற்றிப் பார்த்தபோது அது ஒரு காட்டுப் பகுதி என்பதை உணர்ந்து கொள்கிறான். டார்ச் லைட் ஒன்றின் வெளிச்சம் காட்டி, அவனை வாகனத்தில் இருந்து இறங்கச் சொல்லி, ஒருவன் சைகை காட்டுகிறான். தான் இரவெல்லாம் பயணம் செய்த வாகனத்தை வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தான். மின்சாரம் தாக்கியதைப் போல, நிலை குலைந்து போனான்.
     அவனைக் கொண்டு வந்த அந்த வாகனத்தில் இறந்துபோன மனித உடல்கள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கின்றன. எண்ணிக்கையில் 20 க்கும் குறையாது. அவன் இறங்கிக் கொள்கிறான். இங்கு இருந்துதான் அவன் தப்பி செல்ல வேண்டு. அவனால் நடக்கவ்யும் முடியவில்லை. ஓடவும் முடிய வில்லை. அடர்ந்த காட்டில் இருந்து எவ்வாறு, யார் கண்ணிலும் படாமல் வெளியேறுவது என்பதைவிடவும், அந்த நள்ளிரவில் தன்னோடு பயணித்த அந்த உடல்களைப் பற்றியே எண்ணம். சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இவர்கள் அனைவருமே போராளிகள். தன்னுடன் நண்பனாக, தோழனாக, சகோதரனாக வாழ்ந்த உறவுகள்தான். எதனை வீரம் நிறைந்தவர்கள்? அவனது சிந்தனை அதற்கு மேல் செயல்பட மறுத்துவிட்டது. இவை எல்லாவற்றையும் விட வேறொரு கவலைதான் அவனை வதைத்து எடுக்கத் தொடங்கி விட்டது. பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட தன சக பெண் போராளிகளும் கட்டாயம் இதில் இருந்து இருப்பார்கள் என்பதை நினைக்கும்போது, குளிர் நிறைந்த அந்த அதிகாலையிலும்  உடல் வியர்க்கத் தொடங்கியிருந்தது. காலச் சக்கரங்களின் கூறிய பற்களில் ஏன் தமிழ்ச் சமூகம் சிதைக்கப்பட வேண்டும் என்று அவன் யோசிக்கிறான்?
                                                                                                                 (இன்னும் விதைப்போம்)

Wednesday, October 5, 2011

தமிழா இதைக் கொஞ்சம் கவனி...!

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,

Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமா ந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

Sunday, September 18, 2011

இளையராஜா என்னும் இசை மந்திரம்...!

இன்னிசைப் பாடல்கள் எவ்வளவு கேட்டாலும் அது இளையராஜாவின் பாடல்கள் போலாகுமா?

Sunday, September 4, 2011

தமிழகம் விரும்பும் அடுத்த தலைவர்..!

இனி சினிமாக் கட்சிகள் ஆண்டது போதும்...! உண்மை அரசியல் தலைவர்கள் வந்து ஆளட்டும்...! ஜாதிக் கட்சிகளாக இருக்கும் அரசியல் கட்சிகள் இனியாவது ஜாதியை விட்டு மனிதம் வளர்க்கும் அரசியல் கட்சிகளாக வரவேண்டும் என்பது நம் தமிழர்களின் ஆசை..!இதுவரைக்கும் இருந்த சினிமா கட்சிகள் போதாது என்று விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்து (அவரே எதிர்பார்க்காமல்) எதிர் கட்சி வரிசையிலும் அமர்ந்து விட்டார். இப்படி கருணாநிதியின் குடும்பம் கட்சியை நடத்துகிறதோ அதே போல்தான் விஜயகாந்த் குடும்பமும்...இந்த குடும்ப கட்சிகளை வேரோடு அறுத்து எரிய வேண்டும்..! இவர்களுக்கு தம் குடும்பத்தை நிர்வகிக்கவே நேரம் சரியாக இருக்கிறது...அப்புறம் எப்படி தமிழர்களாகிய நம்மை காப்பாற்றுவார்கள்...தூக்கி எறியுங்கள் இந்த சினிமா, குடும்ப அரசியல் வாதிகளை...வரட்டும் உண்மையான உறுதியான நிலையான நேர்மையான அரசியல் தலைவர்கள்..தொல்.திருமாவளவன், ராமதாஸ் மற்றும் இதர கட்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்து திரு. வைகோ அவர்களின் தலைமையில் நிற்க வேண்டும். மற்ற கட்சிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இது நடை பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழனின் தரம் இந்த தரணியில் தலை நிமிர்ந்து வைக்கச் செய்யும் ஆற்றல் நம் வைகோவிற்கே உண்டு. ஆதலால் அவரை இனி வரும் காலங்களில் ஆதரிப்போம் என் உயிர் தமிழர்களே...இலங்கையில் வாழும் தமிழனுக்கு தனி ஈழம் கிடைக்க நாம் உதவுவோம்..அவர்களுடைய மண்ணை அவர்களுக்கு மீட்டுக் கொடுப்போம்..
     இரண்டு வாரங்களுக்கு முன்பு வசந்த் தொலைக்காட்சியில் இரவு எட்டு மணிக்கு ஒரு சந்திப்பு நிகழ்ச்சி போட்டிருந்தார்கள். அதில் கலந்து கொண்ட ஒருவர் பேச பேச நம்மில் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. "இவன் தமிழனா அல்லது துரோகியா" என்று. அவரோட பேரு ரகோத்தமன். சிபி ஐ  முன்னாள் அதிகாரி. அவர் சொல்கிறார். "பிரபாகரன் வந்து ஒரு மோனோ லிதிக் காரேக்ட்டர். அவன் என்ன நடக்கனும்னு பிளான் பண்றானோ அதை முடித்தே தீருவான். யார் பேச்சையும் கேட்க மாட்டான். அவனுக்கு இந்தியர்களை கண்டாலே பிடிக்காது." ன்னு ...
    ஆமா...பிரபாகரன் மோனோ லிதிக் காறேக்டேர்தான்..பிடிவாதக்காரன் தான்...அதனாலதான் ராஜீவ் காந்தி தன்னை இலங்கையோட வடகிழக்கு மாகாணத்துக்கு முதல்வர் ஆகுறேன்னு ஆசை காட்டம்போது கூட ..பிடிவாதமா மறுத்து...தமிழர்களுக்குன்னு தனி ஈழம் வேண்டும்னு  தீர்மானமா இருந்தான்...ராஜீவ் காந்தி யை நம்பி தன்னிடம் இருந்த ஆயுதங்களில் முக்கால் வாசியை இந்திய இராணுவத்திடம் கொடுத்தான். மற்றவங்க ராஜீவ் காந்தி விஷயத்தில் கவனமா இருக்கணும்னு சொல்லும்போதும் முழுமையா நம்பினான். அப்படி நம்பினவனை கழுத்து அறுதான்களே..அப்போ எங்கேயா போன ரகோத்தமா. அப்போ சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்திருப்ப.

     இதுக்கு மேல ஒரு மோசமான சித்திரவதை இந்த உலகத்தில் யாரும் செய்ய முடியாதுன்ற அளவுக்கு ராஜபக்ஷே செஞ்சிட்டு இருக்கான்...அவனே கேட்க துப்பில்லை..நீ எல்லாம் என்னையா தமிழன்...எப்போடா பிரபாகரன் சாவான்..எப்போடா புத்தகம் எழுதலாம்னு கங்கணம் கட்டிட்டு இருந்தியா..சானல் 4 ன்ற தொலைக்காட்சியில இசைப்ப்ரியான்ர ஒரு தமிழ்ப் பொண்ணு (அவள் விடுதலைப் புலியா இல்லையான்றது இரண்டாம்பட்சம்..) கற்பழிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்றதை காண்பித்தார்களே ...இதை எல்லாம் பார்த்துமா நீ இப்படி பேசுற...உலகத்துல எந்த இனத்திலும் இது போன்ற துரோகியை நாம் பார்த்ததில்லை..இதை வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டியதுதானே..நமக்கு இப்பொழுது ஒரே சந்தேகம்..வசந்த் தமிழனா...அல்லது இந்தியனா...நீ இந்தியனா இரு ..தப்பே இல்லை...ஆனால் அதற்கு முன்பு உன்னுடைய உறவுகளான தமிழர்களைப் பாரு..அவர்கள் சின்னா பின்னமாஇட்டு இருக்காங்க...நீ என்னடானா வாடா இந்தியர்களுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்கே...அங்கே பொய் பாருயா..வட இந்தியர்கள் எல்லாம் நம்ம மேல எவ்வளோ வெறுப்புல இருக்காங்கன்னு தெரியும்...
     தமிழ்த்தாய் கேவலப் படுத்தப் படுகிறாள்...அவள் துகிலை உரிப்பவனுக்கு உதவி செய்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள். மனசு ரொம்ப வலிக்குது.
அன்ன ஹசறேவிர்காக மெரீனா கடற்கரையில் ஒன்று சேர்ந்தவர்கள் ...நம் ஈழத் தமிழர்களுக்காக ஒன்று சேர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...இனியாவது வசந்த், ரகோத்தமன் போன்றவர்கள் திருந்தட்டும்..

Wednesday, May 11, 2011

விடி வெள்ளி முளைக்கும்...தமிழ் சமுதாயம் தழைக்கும்...!

விடி வெள்ளி முளைக்கும்...தமிழ் சமுதாயம் தழைக்கும்...!
தமிழினத்தை கருவறுக்கும் எண்ணம் இருக்கும்
அத்துணை நயவஞ்சகர்க்கும் புது கிலி பிடிக்கும்...
சிங்கம் நடுங்கும் ...சிங்களமும் நடுங்கும்..
படை கொண்டு எம் தமிழீழ விடுதலை படைதனை சூழ்ச்சியால் 
வென்றிட்டார் குலை நடுங்கும்..! எம் குலப் பெண்டிரின் 
கருவருத்தவன் வீட்டில் அவன் குலப் பெண்கள் இனி சூல் கொள்ளாமல் சுண்டிச் சாக நேரிடும்...வரம் கொடுத்தவன் தலையில் கைவத்தவன் போல் 
நாம் தேர்ந்தெடுத்த முதல்வர் நம் தமிழர் ஈழத்தில் படும் பாட்டை
நடுவண் அரசுக்கு கடிதம் எழுதி பொழுதைக் கழித்தார்...
இன்று அவர் படும் பாடு நாம் அறிவோம்..! இன்னும் படுவார்..!
நம் தமிழ் மக்களை யார் அழிக்க நினைத்தாலும் அவர்தம் வாழ்வு விரைவில் அழிபடும்...தர்மம் தனின் வாழ்வுதனை சூது கவ்வும்...இறுதியில் தர்மம் வெல்லும்...இறுதியில் ஒரு பொன் மொழி...கெடுவார் கேடு நினைப்பார்...